தர்பார் படத்தில் ரஜினிக்கு இப்படி ஒரு மாஸான பெயரா! ரசிகர்கள் உற்சாகம்

தர்பார் படத்தில் ரஜினிக்கு இப்படி ஒரு மாஸான பெயரா! ரசிகர்கள் உற்சாகம்


Rajini name in darbar revealed

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. 

அரசியலில் கால்பதிப்பதாக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்ததை தொடர்ந்து ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மூன்று முகம் ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என முருகதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

Darbar

இந்த படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தர்பார் படத்தில் தன்னுடைய தந்தையின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ரஜினியை ஒரு அரசியல்வாதியாக ரசிகர்கள் மனதில் பார்க்க வைத்த படம் அருணாச்சலம். தற்போது மீண்டும் அதே பெயரில் ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.