மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"தலைவர் 171 படத்தில் இந்த நடிகர்கள் நடிக்க கூடாது" ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். லோகேஷ் சினிமா டெக் யூனிவர்ஸ் எனும் புதுவிதமான முறையை தமிழ் சினிமாவில் கையாண்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. இப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் எல் சி யு முறையை பயன்படுத்தி இருந்தார்.
இது போன்ற நிலையில் இப்படத்திற்கு பின்பு லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணிகள் இணைந்து படம் இயக்க ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜிடம் முக்கியமான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது இதற்கு முன்னர் லோகேசின் திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் தலைவர் 171 படத்தில் நடிக்க கூடாது என்றும், எல் சி யு முறையை இப்படத்தில் பின்பற்றக் கூடாது என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறாராம். இதனால் லோகேஷ் கனராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.