சினிமா

நள்ளிரவு முதலே களை கட்டத் துவங்கிய திரையரங்குகள்! பேட்ட படத்திற்கு ரஜினி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Summary:

rajini fans for petta

வரும் பொங்கலை முன்னிட்டு இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் கூடினர்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவின்  படம் வெளியானாலே அனைத்து தியேட்டர்களும் களைகட்டத் துவங்கி விடும். ஆனால் இன்று ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் திரைப்படங்கள் வெளியாவதால் நள்ளிரவு முதலே அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சில தியேட்டர்களில் இரண்டு படங்களும் வெளியாவதால் ஒன்றாக குவிந்த அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல்களும் ஏற்பட்டன. சேலம் ஆத்தூரில் ரஜினி ரசிகர்கள் நள்ளிரவு முதலே திரையரங்கின் முன்பு தாரை தப்பட்டையுடன் அமர்க்களப்படுத்தி பேட்ட திரைப்படத்தினை வரவேற்றுள்ளனர். அதேபோல் சென்னை ரோகினி தியேட்டரிலும் ரஜினி ரசிகர்களின் உற்சாக வரவேற்பு வெளியாகி உள்ளது.

 


Advertisement