ரஜினியின் அரசியல் முடிவால் ஏமாற்றம்.! சோகத்தில் ரசிகர் திடீர் மரணம்.!

விழுப்புரம் அருகே பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்துவந்துள்ளார். ரஜினி அரசியல் கட்சி துவங்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்து இவர் மிக சந்தோஷத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், ரஜினி அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இவர் நேற்று சமூக வலைத்தளத்தில் ரஜினியின் முடிவைக் கேட்டு தனது இறுதி கருத்து என பதிவிட்டு விட்டு அதிர்ச்சியில் இறந்து விட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்து வந்த ராஜ்குமார் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் அயராது பாடுபட்டும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமாருக்கு இரண்டு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.