ரஜினி வீட்டிற்கு முன்பு நின்று கதறி அழும் பெண்.! கதறல் வீடியோ.!



rajini fan crying front of rajini home

கோடிக்கணக்கான ரசிகர்களை தனது தனித்துவமான ஸ்டைலால், கவர்ந்து அவர்களது மனதில் குடி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று(12-12-2020) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து  அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,ரஜினியின் திரைப்பட கெட்டப்புகளில் போயஸ் கார்டனில் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.  ரஜினி படங்களில் நடித்த பாட்ஷா,அண்ணாமலை உள்ளிட்ட  பல கெட்டப்புகளிலேயே அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைக்கூறி கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை பல்வேறு பெண்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது திடீரென பெண் ஒருவர் கதறி அழுது, சூப்பர் ஸ்டார் ரஜினி சார்.. உங்களை பார்க்கணும்னு ரொம்பநாள் காத்திக்கிட்டு இருந்தேன்.. உங்களை பார்க்க முடியலை.. விட மாட்டேங்கிறாங்க சார்.. என கதறி அழுதுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.