சினிமா

ரஜினியின்168 வது படம் எப்படி பட்ட படம்! மனம் திறந்து கூறிய சிறுத்தை சிவா - வெளியான புதிய அப்டேட்

Summary:

Rajini 168 siva

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் A. R முருகதாஸின் இயக்கத்தில் தயாராகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் படமாக்கப்படும் இப்படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ள தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் புதிதாக சிறுத்தை சிவாவுடன் இணைவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிப்பதாக நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதற்கு முன்பு சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளதால் இந்த படமும் ஒரு மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தற்போது சிவா படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது இந்த படம் குடும்ப படம் என்றும், கொஞ்சம் அதிக ஆக்‌ஷன் கலந்துள்ளது. மொத்தத்தில் ஆக்‌ஷன் கலந்த குடும்ப படம் என கூறியுள்ளார். 


Advertisement