சினிமா

சூப்பர் ஸ்டார் மற்றும் தல மோதல்...! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!

Summary:

rajini---ajith-movie-relese-same-date-on-pongal-festival

ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவில் ஏதாவது முக்கிய நடிகர் படங்கள் திரைக்கு வரும், ரசிகர்களும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் தினத்தன்று தல படமும் தலைவாரி சூப்பர் ஸ்டார் படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் தல அஜித்குமார் நடிக்கும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் வரும் வருட பொங்கலுக்கு திரைக்கு கொண்டு படக்குழு திட்டமிட்டு உள்ளனர். ஆகவே இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறலாம். விசுவாசம் திரைப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவே படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொங்கலுக்கு தள்ளிப்போனது. எனவே பொங்கலுக்கு தன விசுவாசம் படம் வெளியாகும் என கூறலாம். இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மிகவும் சுறுசுறுப்புடன் நடந்து வருகிறது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் சங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் 2.0 வரும் நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஆகவே இந்த பொங்கலை ரஜினி ரசிகர்கள் மற்றும் தல ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். 


Advertisement