சினிமா

ஆரம்பமானது நகைச்சுவை இயக்குனர் ராஜேஷின் அடுத்த படைப்பு! ஹீரோ யாருன்னு பார்த்தீங்களா!! வெளிவந்த சூப்பர் தகவல்!!

Summary:

ஆரம்பமானது நகைச்சுவை இயக்குனர் ராஜேஷின் அடுத்த படைப்பு! ஹீரோ யாருன்னு பார்த்தீங்களா!! வெளிவந்த சூப்பர் தகவல்!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாகி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமான அவர் பாஸ் என்ற பாஸ்கரன், கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இறுதியாக அவர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை தற்போது இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் சாந்தனு மற்றும் முகென் ராவ் நடிக்கும் வெப்தொடர் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அதில் ஹன்சிகா மோத்வானி, ஜனனி ஐயர், லக்கி நாராயணன், அபிஷேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனராம். இப்படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement