சினிமா

சசிகுமார் படத்தின் ஒத்த போஸ்டரில் இத்தனை பிரபலங்களா? புகைப்படத்தை பாருங்க உங்களுக்கே தலை சுற்றிவிடும்!!

Summary:

rajavamsam first look poster released

தமிழ் சினிமாவில் செந்தூர் பிலிம்ஸ் சார்பாக டிடி.ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இது  சசிகுமாரின் 19 வது படமாகும். மேலும் இப்படத்தை  சுந்தர்.சியின்  உதவியாளர் கதிர்வேலு இயக்குகிறார். ராஜவம்சம் திரைப்படத்தில் சசிகுமார்க்கு  ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். 

இவர்களுடன் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி, நமோ நாராயணன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

rajavamsam first look poster க்கான பட முடிவு

சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.  இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமார், ராதிகா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்டுள்ளனர் .இதில் ஒரு போஸ்டரில் 24  முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement