
rajarani serial end
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி. காதல் மற்றும் குடும்பத்தை மையமாக கொண்ட இந்த தொடரில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் செம்பாவாக ஆலியா மானசா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த தொடர்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசாவிற்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த இருவரும் ரியல் ஜோடியாகவும் மாறியுள்ளனர்.
மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். இதனால் ராஜாராணி சீரியல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் இந்த அழகிய ஜோடியை இனி பார்க்க முடியாதா என்ற ஏக்கம் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சஞ்சய், ஆலியா மானசா மீண்டும் இணைந்து ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
Advertisement
Advertisement