வினோத நோயால் தினமும் அவதிப்படும் ராஜாராணி கார்த்திக்.! வேதனையில் குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள்!!

வினோத நோயால் தினமும் அவதிப்படும் ராஜாராணி கார்த்திக்.! வேதனையில் குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள்!!


rajarani-karthik-have-different-disease

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி. காதல் மற்றும் குடும்பத்தை மையமாக கொண்ட இந்த தொடரில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும்  செம்பாவாக ஆலியா மானசா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த தொடர்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சஞ்சீவ்  மற்றும் ஆலியா மானசாவிற்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த இருவரும் ரியல் ஜோடியாகவும் மாறியுள்ளனர்.

மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடரில் புதிய மாற்றமாக சமீபத்தில் சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சஞ்சீவ் கூறுகையில்,  எனக்கு சிறுவயதில் இருந்தே அல்டோஃபோபியா என்ற ஒரு பெரிய பிரச்சனை உள்ளது, அதாவது உயரத்தைக் கண்டு பயப்படுவது தான் அந்த நோய்  .

sanjeev

இந்த பிரச்சனையால் நான் பல கிண்டல்களையும்,அவமானங்களையும் சந்தித்துள்ளேன். நான் சிங்கப்பூரில் சூட்டிங்  எனவும் மிகவும் மகிழ்ச்சியான சென்றேன் . ஏனெனில் எனக்கு இதுவே முதல் முறை சிங்கப்பூர் பயணம்.ஆனால் படப்பிடிப்புக்கு சென்ற உடன் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.ஏனெனில் மிக உயரமான இடத்தில் ஷூட்டிங் நடைபெற்றது.

 இந்நிலையில் எனது பிரச்சினை குறித்து நான் இயக்குனரிடம் கூறினேன். ஆனால் அவர் உங்களது பிரச்சனைகளை சரிசெய்து விட்டு நீங்கள் நடிக்க வந்திருக்க வேண்டும் என திட்டிவிட்டார். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது. 

அதனால் இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டுவர எனவே நண்பர்களிடம் ஐடியா கேட்டுள்ளேன் அவர்களும் எனக்கு நிறைய அறிவுரைகள் கூறியுள்ளனர். அதனால் விரைவில் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்