வாவ்.. செம கியூட்!! முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா, ராஜாராணி பிரபலம்!!

வாவ்.. செம கியூட்!! முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா, ராஜாராணி பிரபலம்!!



rajarani-bharathi-kannamaa-director-praveen-pennat-post

பாரதி  கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்த தொடர் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரவீன் பென்னட். பின்னர் அவர் ஆலியா மற்றும் சஞ்சீவ் நடிப்பில் ராஜாராணி தொடரை இயக்கினார். அந்த தொடரும் செம ஹிட்டானது.

மேலும் பிரவீன் பென்னட் தற்போது பாரதி கண்ணம்மா, ராஜாராணி 2 ஆகிய சீரியல்களை இயக்கி வருகிறார். இந்த சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில்  இயக்குனர் பிரவீன் நடிகை சாய் பிரமோதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சாய் பிரமோதிதா கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளநிலையில் அண்மையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிரவீன் பென்னட் முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.