ராஜாராணி 2 ஸ்ட்ரிக்ட் மாமியாரா இது! இளம்வயதில் மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பார்த்தீர்களா!!

ராஜாராணி 2 ஸ்ட்ரிக்ட் மாமியாரா இது! இளம்வயதில் மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பார்த்தீர்களா!!


rajarani actress praveena young photo viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரியமானவள் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரவீனா. இவர் மலையாளத்திலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சன்டிவியில் மகராசி தொடரில் மாமியாராக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய பிரவீனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஸ்ரிக்ட் மாமியாராக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் களமிறங்கிய அவர் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களிலும்  நடித்துள்ளார்.

Praveena

கேரளா செங்கணசேரியில் பிறந்த அவர் 18 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அவர் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை பிரவீனா இளம் வயதில் மாடர்னாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் ராஜாராணி2 ஸ்ட்ரிக்ட் மாமியாரா இது? என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

      Praveena