அட.. வேற லெவல்! அந்த ஒரு விஷயத்திற்காக அஜித்தை புகழ்ந்து தள்ளிய பாகுபலி இயக்குனர்! என்னனு நீங்களே பாருங்க!!

அட.. வேற லெவல்! அந்த ஒரு விஷயத்திற்காக அஜித்தை புகழ்ந்து தள்ளிய பாகுபலி இயக்குனர்! என்னனு நீங்களே பாருங்க!!


Rajamouli wish ajith video viral

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகிறது. இதற்கிடையில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்ஆர்ஆர். 

இப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மூவரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட சந்திப்பு குறித்தும் அவரை புகழ்ந்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஒருமுறை ராமோஜி பிலிம் சிட்டியில் அஜித்தை சந்தித்தேன். அங்கு  பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்றில் அஜித் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னை கண்டதும் உடனே எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார். பின்பு என்னை அழைத்துச் சென்று அவரது டேபிளில் அமர வைத்தார்.

பின்பு எனது மனைவி உள்ளே வந்தார். உடனே அஜித் எழுந்து சென்று அவரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவரையும் அழைத்து வந்து அமர வைத்தார். மேலும் தற்போது அவர் செய்த விஷயம் என்னை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதாவது கோடிக்கணக்கான ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கும் நிலையில், அவர் தல என்பதை நீக்கிவிட்டு அஜித் குமார் அல்லது ஏகே என்று கூப்பிட சொன்னார். உண்மையிலே அவருக்கு ஹாட்ஸ் ஆப் என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.