சினிமா

பிறந்தநாளுக்கு செந்தில் கணேஷுக்கு ராஜலக்ஷ்மி என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

Summary:

Rajalakshmi presented gift to senthil ganesh

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலக்க போவது யாரு, பிக் பாஸ், அது இது எது, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடர்களா அறிமுகமானவர்கள் ஏராளம்.

அந்த வகையில் தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளனர் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். கடந்த சீசனில் பங்கேற்ற இவர்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்கள். மேலும் பல்வேறு படங்களில் பாடும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் தனது கணவருக்கு பிறநதனால் பரிசு கொடுத்தது பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் ராஜலக்ஷ்மி.

ராஜலட்சுமி

ஏன் கணவர் ரொம்ப நாளா ஆர்மோனியப் பெட்டி வாங்கணும்னு சொல்லிட்டே இருந்தார். ஆர்மோனியப் பெட்டி வாங்குறது பெரிய விஷயமில்லை. கடைக்குப் போனா வாங்கிக்கலாம். ஆனா, இசைத்துறையில் மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறவங்க கையால ஆர்மோனியத்தை வாங்கினால் அது மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்னு அவர் சொல்லிட்டே இருந்தார்.  அந்த சமயத்தில்தான் இசைஞானி இளையராஜா ஐயாவுடைய ஆபீஸ்ல இருந்து வாய்ஸ் டெஸ்ட்டுக்குக் கூப்பிட்டாங்க.

ராஜலட்சுமி

ஐயாகிட்ட, ஆர்மோனியப் பெட்டியில் கையொப்பம் வாங்கி பிறந்தநாள் பரிசா என் கணவருக்குக் கொடுக்கலாமேன்னு தோணுச்சு .அப்புறம் எப்படியோ இளையராஜா ஐயா கிட்ட கையெழுத்து வாங்கிட்டோம். அதனை என் கணவருக்கு கொடுக்கும் போது அவர் மிகவும் சந்தோசப்பட்டார் என தெரிவித்துள்ளார்.


Advertisement