ராஜலக்ஷ்மியின் பிறந்தநாளை ஆஸ்திரேலியாவில் செந்தில் கணேஷ் எப்படி கொண்டாடினார் தெரியுமா? வைரல் வீடியோ!

ராஜலக்ஷ்மியின் பிறந்தநாளை ஆஸ்திரேலியாவில் செந்தில் கணேஷ் எப்படி கொண்டாடினார் தெரியுமா? வைரல் வீடியோ!


rajalakshmi birthday celebration


விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சிமூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள்தான்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானார்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடைசி வரை சென்று பட்டத்தை கைப்பற்றினார் செந்தில் கணேஷ். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக பாடி வருகிக்கின்றனர். சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலம் ஆனது. 

இந்த நிலையில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி ஆஸ்திரேலியா சென்றிருந்தனர். அங்கு ராஜலட்சுமி தனது பிறந்த நாளை கணவர் மற்றும் இசைக்குழுவினர் முன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் கிராமிய இசையை உலகம் முழுவதும் பரப்பி வரும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு, ராஜலட்சுமிக்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.