சத்தமில்லாமல் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் செய்துள்ள சாதனை! என்ன தெரியுமா?

சத்தமில்லாமல் விஜய் டிவி ராஜா ராணி சீரியல் செய்துள்ள சாதனை! என்ன தெரியுமா?



Raja rani serial crossed 500 episodes

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், தொடர்கள் என மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

சூப்பர் சிங்கர், பிக் பாஸ், அது இது எது போன்ற தொடர்கள் மக்களின் பேவரைட். அதேபோல இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதுபோன்ற சீரியலில் ஒன்றுதான் ராஜா ராணி. ஆலியா மானசா செண்பா என்ற கதாபாத்திரத்திலும், குளிர் 100 டிக்ரீ படத்தின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

Raja rani

மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ராஜா ராணி தொடர் தொடங்கி 500 எபிசோடுகள் முடிந்துவிட்டதாம். இதனை கொண்டாடும் விதமாக விஜய் டிவி இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.