பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ராஜா ராணி செண்பா எடுத்த அதிரடி முடிவு! என்னனு நீங்களே பாருங்க!

பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ராஜா ராணி செண்பா எடுத்த அதிரடி முடிவு! என்னனு நீங்களே பாருங்க!



Raja rani senba off her Instagram comments

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஓன்று ராஜா ராணி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஆலியா மானசா. செண்பா இவரது கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றதோடு இளைஞர்களின் கனவு கன்னியாகவும் மாறிவிட்டார் ஆலியா.

இந்த தொடரில் நாயகனாகவும், ஆலியா மானஸாவுக்கு ஜோடியாகவும் நடிக்கின்றார் குளிர் 100 டிகிரி ஹீரோ சஞ்சீவ். இந்த தொடருக்கு முன்பு ஒருவரை காதலித்துவந்த ஆலியா அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தற்போது ராஜா ராணி தொடரின் நாயகனும், ஆலியாவும் காதலித்து வருகின்றனர்.

Aliya Manasa

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் ஆலியா. இந்நிலையில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு பாசிட்டிவான கமெண்டுகள் வந்தாலும் சில நேரங்களில் மோசமான விமர்சனங்களும் வருவது உண்டு.

தற்போது இதனை தடுக்க தனது புகைப்படங்களுக்கு விமர்சனங்கள் பதிவிடுவதை பிளாக் செய்துள்ளார் ஆலியா. பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஆலியா எடுத்த முடிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.