இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடந்த ஆதி - ஜெசி திருமணம்.. கலக்கல் ப்ரமோவை வெளியிட்டது விஜய் டிவி.!

இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடந்த ஆதி - ஜெசி திருமணம்.. கலக்கல் ப்ரமோவை வெளியிட்டது விஜய் டிவி.!


Raja rani 2 today promo

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்ற நெடுந்தொடர் ராஜாராணி. தற்போது இதன் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் மாமியாராக இருக்கும் சிவகாமி, மருமகள் சந்தியாவிற்கு பலதடைகளை ஏற்படுத்தி ஐபிஎஸ் தேர்வு எழுத அனுமதி வழங்குகிறார். 

இதனைத் தொடர்ந்து ஆதி தனது காதலியை கர்ப்பமாக்கிய நிலையில், இவர்களது திருமணம் நடைபெறுமா? எப்படி சாத்தியமாகும்? என்ற வகையில் கதை நகர்ந்து வந்தது. அத்துடன் சந்தியா ஐபிஎஸ் டிரெய்னிங் செல்ல வேண்டுமென்றால், காணாமல் போன 5 லட்சம் பணத்தை கண்டுபிடித்தால் மட்டுமே முடியும் என்று சிவகாமி கூறினார். 

Raja Rani 2

இறுதியாக அது ஆதி என தெரிந்ததும் சந்தியா அந்த உண்மையை கூறாமல் சிவகாமியிடம் மழுப்பினார். சரவணன் மூலமாக அது கண்டுபிடிக்கப்பட்டு ஆதியை அனைவரும் அடித்து முகம்கொடுத்து கூட பேசாது இருந்தனர். இதனால் ஆதி - ஜெஸி திருமணம் நடைபெறுவது கஷ்டம் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

Raja Rani 2

இந்த நிலையில், தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆதி - ஜெஸிக்கு இந்து முறைப்படியும், கிறிஸ்டியன் முறைப்படியும் திருமணம் நடைபெறுகிறது. குடும்பமே மகிழ்ச்சியாக அவர்களது திருமணத்தை நடத்திவைத்தது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.