புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஐபிஎஸ் கனவை நிறைவேற்றிய சந்தியா.. குஷியில் சரவணன்..! அட்டகாசமான ராஜாராணி 2 ப்ரோமோ வைரல்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நெடுந்தொடர் ராஜா ராணி. இதன் முதல் பாகத்தில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா நாயகன் - நாயகியாக நடித்திருந்த நிலையில், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அதில் மருமகள் சந்தியா தனது ஐபிஎஸ் கனவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு முதலில் சிவகாமி ஒப்புக்கொள்ளாதிருந்த நிலையில், தற்போது ஒப்புக்கொண்டு சந்தியாவை ட்ரைனிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இந்த வார ப்ரோமோவில், "சந்தியா ஓட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல் போன்ற பலவற்றிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபிக்கிறார். இதனால் சரவணன் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில், சந்தியா டிரைனிங்கை சிறப்பாக முடித்து போலீஸ் ஆவாரா?" என்ற கேள்வியுடன் முடிவடைந்துள்ளது.