சவாலை வென்ற சந்தியா.. வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கும் சிவகாமி..! அடுத்தடுத்த திருப்பங்களுடன் அசத்தல் ப்ரோமோ..!!

சவாலை வென்ற சந்தியா.. வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுக்கும் சிவகாமி..! அடுத்தடுத்த திருப்பங்களுடன் அசத்தல் ப்ரோமோ..!!


raja rani 2 promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் ராஜாராணி. தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் மாமியாராக இருக்கும் சிவகாமி தனது மருமகள் சந்தியாவிற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி, பின் ஐபிஎஸ் தேர்வு எழுத அனுமதி வழங்கினார். 

Raja Rani 2

இந்த நிலையில், சந்தியாவிற்கு குண்டடி பட்டதால் மீண்டும் ஐபிஎஸ் ட்ரெயினிங் செல்லக்கூடாது என்று சிவகாமி கூறுகிறார். ஆனால் அதனை மீறிய சந்தியா சென்னைக்கு சென்று தீவிரவாதிகளிடமிருந்து தனது தலைமை காவல் அதிகாரியை மீட்டு பெரும் சாதனையை படைத்துள்ளார். 

Raja Rani 2

இதன் மூலம் சந்தியா தனது மாவட்டத்திலேயே ஐபிஎஸ் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சிவகாமி சந்தியா வீட்டிற்குள் வரும்போது, "நீ உள்ளே வரக்கூடாது. என் மருமகளாக வீட்டிற்குள் நுழையலாம். ஆனால் ஒரு காவல் அதிகாரியாக என்றும்  நீ எனது வீட்டிற்குள் நுழையகூடாது என்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனை ஏற்ற சந்தியா தற்போது காவல்அதிகாரி உடையில் கலக்கும் அசத்தல் ப்ரோமோ வெளியாகியுள்ளது".