"ரஜினியுடன் நான் நடிக்க மாட்டேன்" திட்டவட்டமாக பட வாய்ப்பை மறுத்த ராஜ்கிரண்.?

"ரஜினியுடன் நான் நடிக்க மாட்டேன்" திட்டவட்டமாக பட வாய்ப்பை மறுத்த ராஜ்கிரண்.?


Raj kiran said cant act with rajini movie

கோலிவுட் திரை உலகில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ராஜ்கிரன். இவர் தமிழில் முதன் முதலில் 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Raj kiran

முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தந்து பட வாய்ப்புகளை தொடர்ந்து குவித்தது. இதன்பின் அரண்மனை கிளி, நந்தா, முனி, சண்டக்கோழி என பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இது போன்ற நிலையில், ராஜ்கிரன் ரஜினிகாந்த் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Raj kiran

2007 ஆம் வருடம் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த வெளியான 'சிவாஜி' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு ராஜ்கிரனுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் பணத்திற்காக எப்பொழுதும் வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.