கருப்பு நிற உடையில் கண் கவர் போட்டோஷூட்  நடத்திய ரைஸா.. வைரலாகும் புகைப்படங்கள்!

கருப்பு நிற உடையில் கண் கவர் போட்டோஷூட்  நடத்திய ரைஸா.. வைரலாகும் புகைப்படங்கள்!



raiza-wilson-black-dress-photoshoot-viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.ஆனால் ரைசா வெற்றியடையவில்லை.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. 

Raiza wilson

அந்த வகையில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம்முழுக்க காதல் கதையம்சத்தை கொண்ட இந்த படத்தில் ஹரிஸ் மற்றும் ரைசாவின் நடிப்பு மிகவும் சிறப்பாகவே அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. 

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அலைஸ், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் காதநாயகியாக நடித்துள்ளார்.

Raiza wilson

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது