பிக்பாஸ் புகழ் ரைசாவிற்கு கிடைத்த புதிய விருது! பூரிப்பில் ரைசா

பிக்பாஸ் புகழ் ரைசாவிற்கு கிடைத்த புதிய விருது! பூரிப்பில் ரைசா



Raiza got new award

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இதன் முதல் கட்டமாக தனது சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.

Raiza

முழுக்க முழுக்க காதல் கதையம்சத்தை கொண்ட இந்த படத்தில் ஹரிஸ் மற்றும் ரைசாவின் நடிப்பு மிகவும் சிறப்பாகவே அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. 

இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரைசாவிற்கு JFW என்ற பிரபல பத்திரிக்கை நிறுவனம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வழங்கியுள்ளது.