சினிமா

நடிகை ரைசாவிற்கு என்னாச்சு! முகமெல்லாம் வீங்கி, விகாரமா ஆகிட்டாரே! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸிற்கு பிறகு ஏராளமான படவாய்ப்புகள் வரத்துவங்கிய நிலையில் அவர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரைசா கைவசம் தற்போது அலைஸ், காதலிக்க  யாருமில்லை, எஃப் ஐ ஆர், ஹேஷ்டாக் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது கண்களுக்கு கீழ் வீக்கமாக முகமே விகாரமா இருந்துள்ளது. அதனை கண்டு பலரும் ஷாக்காகியுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில் , 
சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்தேன்.

அப்போது அவர் நான் சொல்லியும் கேட்காமல் தேவையில்லாத சில விஷயங்களை செய்தார். அதனால் என் முகம் இப்படியாகிவிட்டது  அதனைத் தொடர்ந்து அவர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார், நான் சந்திக்க முயற்சி செய்தபோது அவர் வெளியூரில் இருப்பதாக அவரது ஊழியர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார். இதனை கண்டு அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

 

 


Advertisement