சினிமா

அப்பா வயது நடிகருடன் ஜோடி சேரப்போகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

Summary:

Rahul preeth casting with balakrishana next movie

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத்சிங். கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தேவ் படத்தில் நடித்துள்ளார். தேவ் படம் வரும் கால்தளர் தினத்தற்று வெளியாயுள்ளது. மேலும் சூர்யாவுடன் NGK படத்தில் நடித்துள்ளார்.  சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என கைகளில் படங்களை ரெடியாக வைத்துள்ளார். இதுமட்டுமல்ல தெலுங்கில் முக்கிய நடிகரான நந்தாமுரி பால கிருஷ்ணாவுடன் முக்கிய படத்தில் இணைகிறாராம்.

இப்படத்திற்காக இரு ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்களாம். அதில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். பாலகிருஷ்ணாவுக்கு வயது 58. இவர் வயதில் பாதிதான் ரகுலின் வயதாகும். அனைத்து சினிமாக்களிலும் மூத்த நடிகர்களுக்கு பெரும்பாலும் இளம் கதாநாயகிகள் தான் ஜோடியாகிறார்கள்.


Advertisement