வில்லன் நடிகர் ரகுவரனின் மகனா இது.? வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

வில்லன் நடிகர் ரகுவரனின் மகனா இது.? வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!



Raguvaran son photos viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் ரகுவரன். இவர் தமிழில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தாலும் காலப்போக்கில் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார்.

Raguvaran

தமிழில் முதன் முதலில் ஏழாம் மனிதன் எனும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வில்லன் நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பை உடைத்தவர் ரகுவரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் மார்க் ஆண்டனி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வில்லனாக ரசிகர்களை கவர்ந்தார்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த்து. இதன் பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்து ஆனது.

Raguvaran

இதனால் மனமுடைந்து போன ரகுவரன் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால் இவர் மகனை பற்றிய புகைப்படம் எதுவும் இணையதளத்திலும் வெளியாகவில்லை. மேலும் தற்போது நடிகர் ரகுவரனின் மகன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரகுவரன் போலவே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.