இனிய நினைவுகள்..! நடிகர் பிரபுதேவாவுடன் அருகில் இருக்கும் பிரபல நடிகர்..! யார் தெரியுதா..? வைரல் புகைப்படம்.! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இனிய நினைவுகள்..! நடிகர் பிரபுதேவாவுடன் அருகில் இருக்கும் பிரபல நடிகர்..! யார் தெரியுதா..? வைரல் புகைப்படம்.!

நடிகர் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இனிமையான நினைவுகள் வித் பிரபுதேவா மாஸ்டர் என பதிவிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

பொதுவாக நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதுவும் இந்த கொரோனா சமயத்தில் சொல்லவே தேவை இல்லை. தங்களது பழைய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எப்போதும் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர் சினிமா பிரபலங்கள்.

அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் சற்று வித்தியாசமானவர் என்றே கூறலாம், கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இன்றுவரை பலகோடி ரூபாய் நன்கொடை வழங்கியது, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்வது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரிடம் உதவியை கேட்டுப் பெறுவது,  அரசின் செயல்பாடுகளை பாராட்டுவது என எப்போதும் ட்விட்டரில் பயங்கர பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் நடன இயக்குநர் பிரபுதேவாவுடன் தான் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை தடிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இனிமையான நினைவுகள் வித் பிரபுதேவா மாஸ்டர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo