சினிமா

கிளம்பிய எதிர்ப்புகள்! தனது மாஸ் படடைட்டிலை மாற்றிய ராகவா லாரன்ஸ்!என்ன தெரியுமா?

Summary:

ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கிய லட்சுமி பாம் பட டைட்டிலுக்கு குறிப்பிட்ட மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்தியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லட்சுமி பாம். இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

காஞ்சனா திரைப்படம்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள லட்சுமி பாம் திரைப்படம்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில்,  தீபாவளி விருந்தாக நவம்பர் 9ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது.

இந்நிலையில்  லட்சுமி பாம்  என்ற டைட்டில் இந்துக்களின் மனதை  வருத்தப்பட வைப்பதாகவும், படத்தில் பெயரை மாற்றக் கோரியும் மத அமைப்புகள் சார்பாக குரல் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டிலை லட்சுமி என படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.


Advertisement