சினிமா

சின்னத்திரை காதல் ஜோடி ராகவ்- ப்ரீத்தாவிற்கு இவ்ளோ பெரிய மகளா! எவ்ளோ கியூட்டாக இருக்கிறார் பார்த்தீர்களா!!

Summary:

90களில் ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர்கள் ராகவ்- ப்ர

90களில் ஏராளமான சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர்கள் ராகவ்- ப்ரீத்தா ஜோடி. நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர், மியூசிக் கம்போசர், டான்சர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் ராகவ் சில டிவி தொடர்களில் நடித்துள்ளார். 

மேலும் அவருக்கு வெள்ளிதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் ராகவ் தமிழ் சினிமாவில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த நஞ்சுபுரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நீ ரொம்ப அழகா இருக்க, சத்தம் போடாதே,ஜெர்ரி,எந்திரன், சிலம்பாட்டம்,வேலாயுதம் என பல படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராகவ் நடிகை ப்ரீத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிறந்த காதல் தம்பதிகளாக விளங்கி வந்த அவர்கள் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். பிரீத்தாவும் தொலைக்காட்சி தொடர்களிலும், வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்துள்ளார். அவர்களுக்கு தனிஷா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ப்ரீத்தா தற்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் என்றும் இளமையாக இருக்கும் ராகவ் ப்ரீத்தா ஜோடிக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement