வாவ்! ஒரு காலத்தில் செம கலக்கலாக இருந்த ராகவ்-ப்ரீத்தா காதல்ஜோடிக்கு இவ்வளவு பெரிய மகளா! வைரலாகும் கியூட் புகைப்படம்!

வாவ்! ஒரு காலத்தில் செம கலக்கலாக இருந்த ராகவ்-ப்ரீத்தா காதல்ஜோடிக்கு இவ்வளவு பெரிய மகளா! வைரலாகும் கியூட் புகைப்படம்!



ragav preetha daughter photo viral

பிரபல பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி மானாட மயிலாட. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நடன திறமையால் வெற்றிப்பெற்றவர் ராகவ் வெங்கட்ராமன். அதுமட்டுமின்றி அவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

 இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவர் தொகுப்பாளர், இயக்குனர், நடனம், இசை என பன்முக திறமைகளை கொண்டு விளங்கினார். மேலும் ஒருகாலத்தில் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார். இந்நிலையில் ராகவ் தான் பல வருடங்களாக காதலித்து வந்த ப்ரீத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ragav

அவரும் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். மேலும் சமையல் குறிப்பு, ஆன்மீகம் போன்ற பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் அவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர்களுக்கு தனிஷா என்ற மகள் உள்ளார்.

 இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட தமிழ் ரசிகர்கள் ராகவ் ப்ரீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

ragav

ragav