
Radhika sarathkumar vijay dialogue video goes viral
பெண்கள் மட்டும் விளையாடும் கோடீஸ்வரி என்ற பிரத்யேக நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழக்கங்க உள்ளார்.
இதுதொடர்பாக பேசியிருந்த அவர், பெண்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நான் ஒரு கருவியாக இருக்கப்போவதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். மேலும், 3000 பெண்கள் முதல்கட்ட சுற்றில் பங்கேற்ற நிலையில் தற்போது 120 பெண்கள் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் எபிசோட் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொண்ட பெண் போட்டியாளர் ஒருவர் நீங்கள் தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தது எனக்கு மிகவும் பிடிக்கும் என கூற, உடனே ராதிகா தெறி பட வசனத்தை பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.
இந்த காட்சியை ப்ரோமோவாக கலர்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ.
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பாப்பா..!! 😍😍
— Ramesh Bala (@rameshlaus) December 23, 2019
விஜய்யின் வசனத்தை பேசி அரங்கத்தை அதிரவைத்த ராதிகா சரத்குமார் 😇😇#ColorsKodeeswari | திங்கள் - வெள்ளி இரவு 8 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்@actorvijay | @RealRadikaa | @ColorsTvTamil | #ThalapathyVijay
pic.twitter.com/Y5XAs3OrBD
Advertisement
Advertisement