விஜய் இந்த லெவலுக்கு வருவார்னு நான் யோசிக்கவே இல்லை.. ஆனால், அஜித் வருவார்னு அப்போவே தெரியும்..!

விஜய் இந்த லெவலுக்கு வருவார்னு நான் யோசிக்கவே இல்லை.. ஆனால், அஜித் வருவார்னு அப்போவே தெரியும்..!


Radhika sarathkumar talks about vijay and ajith

வெள்ளித்திரை, சின்னத்திரை என தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இவர் விரைவில் சித்தி 2 சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வர உள்ளார் ராதிகா.

இந்நிலையில் பிரபல இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராதிகா, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது எங்கள் நீதி படத்தில் விஜய்யுடன் தான் நடிக்கும்போது விஜய் மிகவும் சின்ன பையன். வந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டுவேன்.

Radhika

விஜய் இவ்வளவு பெரிய நடிகரா, இவ்வளவு பெரிய மனிதரா வருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை. இன்று அவரது வளர்ச்சியையும், புகழையும் பார்த்து அவரது பெற்றோர் அளவுக்கு தானும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித் பற்றி பேசிய அவர், பவித்ரா என்ற படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடித்தேன். அஜித் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும். மேலும், அஜித்தை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள் என நானே பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளேன் என ராதிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Radhika