நள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த அழகான சர்ப்ரைஸ்! நடிகர் சரத்குமாரின் ரியாக்சனை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

நள்ளிரவு 12 மணிக்கு நடிகை ராதிகா கொடுத்த அழகான சர்ப்ரைஸ்! நடிகர் சரத்குமாரின் ரியாக்சனை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!


Radhika gave birthday surprise to sarathkumar

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர், பத்திரிக்கையாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் சாயா என்பவரை கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்தநிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து சரத்குமார் 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில் நடிகர் சரத்குமார் நேற்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ராதிகா தனது மகனுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்து, கேக் வெட்டி   கணவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.