பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்! அட.. யார்னு பார்த்தீங்களா.! எகிறும் எதிர்பார்ப்பு!!

பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்! அட.. யார்னு பார்த்தீங்களா.! எகிறும் எதிர்பார்ப்பு!!



raboert-master-going-to-participate-in-bigboss-season-6

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 
 இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம்  தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் வீடு காட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளது.

Bigboss season6

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள உள்ளதாக தொடர்ந்து பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரபல நடன இயக்குனர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது விஜய், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் நடிகை வனிதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர்.