அஜித்தின் உண்மைமுகத்தை போட்டுடைத்த ரங்கராஜ் பாண்டே! என்ன கூறியுள்ளார் தெரியுமா?
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படம் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேகே ஆகும். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.
மேலும் ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே அபிராமி வெங்கடாஜலம், டெல்லி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ரங்கராஜ் பாண்டே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார், அப்பொழுது அவர் கூறியதாவது, அனைவரும் சொல்வது போல அஜித் ஒரு அற்புதமான மனிதர்.வியக்கவைக்கும் வகையில் அனைவரிடமும் அன்பாக பழகுவார். மேலும் தன்னுடன் பழகக்கூடிய நண்பர்களுக்காக அவரது உயிரையும் கொடுக்கும் மனப்பான்மைமிக்கவர்.
மேலும் அவரிடம் ஆச்சரியங்கள் மிகுந்த நிறைய நல்ல குணங்கள் உள்ளது. ஏறக்குறைய பதினைந்து நாட்கள் காலை முதல் மாலை வரை முழுவதும் நான் அவருடன் இருக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அருமையான அனுபவம் என ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.