கர்ப்பமாக இருக்கும் போது இப்படி ஒரு காட்சி தேவையா!! ராஜா ராணி இயக்குனரை கழுவி ஊற்றும் ரசிகர்கள்...

கர்ப்பமாக இருக்கும் போது இப்படி ஒரு காட்சி தேவையா!! ராஜா ராணி இயக்குனரை கழுவி ஊற்றும் ரசிகர்கள்...


raaja-raani-2-promo-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரின் முதல்பாகம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார். தற்போது இந்த சீரியலில் சில எபிசோடுகளில்  ரொமான்ஸ் காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. அதிலும் சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி 2 சீரியலில், ஆலியா மானசா சித்துவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் வந்திருந்தது. இதனால் அந்த காட்சி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Raaja

இந்நிலையில்  சமீபத்தில் வெளியான ராஜா ராணி 2 ப்ரோமோவில் ஆல்யாவை சித்து தூக்குவது போல காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு காட்சி அவசியம் தானா என்று திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ  அந்த காட்சி...