நயன்தாராவின் சாதனையை தூக்கி, தூர வீசிய காஜல் அகர்வால்! ஒரே படத்தில் இவளோ சாதனையா?

நயன்தாராவின் சாதனையை தூக்கி, தூர வீசிய காஜல் அகர்வால்! ஒரே படத்தில் இவளோ சாதனையா?


Queen tamil remake crossed koko youtube views

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால். காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், மற்ற மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நயன்தாரா தற்போது தளபதி 63 படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கங்கனா ரணாவத் நடித்த பாலிவுட் திரைப்படமான 'குயின்' வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக கங்கனா சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது இந்தப்படம் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம்,  ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் மனு குமரன் என்பவர் தயாரித்து வருகிறார்.

nayanthara

தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் இந்த படம் ரீமேக் ஆகி வருகிறது. இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் டீசர் 7.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.  பெண் கதாப்பாத்திரைத்தை முதன்மையாகக் கொண்டு உருவான நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற யூடியூப்பில் சாதனை படைத்தது.

nayanthara

தற்போது 7.2  பார்வையாளர்களை பெற்று, இந்த சாதனையை முறியடித்துள்ளது காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்'  திரைப்படம். இதனால் படக்குழுவினர் படு உற்சாகத்தில் உள்ளனர்.