'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது.? சூப்பரான தகவலை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்.!

'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது.? சூப்பரான தகவலை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்.!



Pussy Anand speech about Leo Audio launch

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

Leo

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். 

Leo

சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இந்த மாதம் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கான அனுமதி சீட்டுகளை மாவட்ட நிர்வாகிகளிடம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.