சினிமா விளையாட்டு

புஷ்பா படத்தில் உள்ள பாடலுக்கு நடனமாடி அசத்திய ஹர்திக் பாண்டியா!! அதுவும் யாருடன் பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ இதோ..

Summary:

புஷ்பா படத்தில் உள்ள பாடலுக்கு நடனமாடி அசத்திய ஹர்திக் பாண்டியா! அதுவும் யாருடன் பார்த்தீங்களா....! வைரலாகும் வீடியோ இதோ...

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதை தொடர்பாக உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் புஷ்பா.  இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும் புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற அப்படத்தில் அமைந்துள்ள பாடல்களும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில்  புஷ்பா படத்தில் உள்ள பாடலுக்கு திரை  பிரபலங்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தற்போது புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீவள்ளி பாடலுக்கு  தனது பாட்டியுடன் நடனமாடி வீடியோவை சமூக  வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த  வீடியோ இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி ரசிகர்களின்  கமெண்ட்களை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ.

 


Advertisement