தாமதமாகும் புஷ்பா-2 பட ஷூட்டிங்.! இதுதான் காரணமா?? வெளிவந்த தகவல்!!

தாமதமாகும் புஷ்பா-2 பட ஷூட்டிங்.! இதுதான் காரணமா?? வெளிவந்த தகவல்!!


Pushpa 2 shooting delay for not finding suitable location

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. செம்மர கடத்தலை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது.

இந்த படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது.

Pushpa 2

ஆனால் தற்போது வரை புஷ்பா 2 படத்தின் வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் படத்திற்கு ஏற்ற சரியான லொகேஷன் கிடைக்காததால் படத்தின் சூட்டிங் தொடங்குவது தாமதமாவதாக தகவல் வெளியாகவுள்ளது. மேலும் இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என கூறப்படுகிறது.