சினிமா

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு! பொண்ணு யாருனு பார்த்தீர்களா!! வைரலாகும் ஜோடி புகைப்படம்!!

Summary:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொ

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, மூன்றாவது போட்டி முடிவடைந்ததும் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவியது.

மேலும் கிரிக்கெட் வீரர் பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவியது. ஆனால் அதற்கு அனுபமாவின் தாயார் மறுப்பு தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து பும்ரா  கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை  கோவாவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. சஞ்சனா கணேஷ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்த நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 


Advertisement