BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
செம ஹேப்பி.. எப்படி சொல்றதுனே தெரியல! நன்றி கூறி புகழ் வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமானவர் புகழ். தனது காமெடியான பேச்சால், செயலால் அவர் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
மேலும் புகழ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி புகழுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. அவர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை படத்திலும் நடித்துள்ளார். வலிமை படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்தது. அந்த ட்ரைலரில் புகழ் அஜித்துடன் இருந்த புகைப்படமும் இணையத்தில் டிரெண்டானது.
இந்நிலையில் புகழ் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அஜித் சார், இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள். என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.