சினிமா

ஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி! அதிர்ச்சியில் படக்குழுவினர்!

Summary:

Producer tvv thanayyaa positive covid 19

சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகநாடுகள் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி, சாமானிய மக்கள் முதல் அரசியல்வாதிகள்,  
திரைப்பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் மாபெரும் பிரம்மாண்ட படமான பாகுபலியை இயக்கிய எஸ்.எஸ் ராஜமவுலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன்  தனிமைப்படுத்திகொண்டு  சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்ஆர்ஆர்) இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி,ரேய் ஸ்டீவன்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா. இவர் தெலுங்கில் ஏராளமான மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் டிவிவி தனய்யாவிற்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்து வந்த நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது படக்குழுவினர் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement