சினிமா

மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லால் அடித்துக்கொல்வோம்.. விஜய் சேதுபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்.!

Summary:

மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லால் அடித்துக்கொல்வோம்.. விஜய் சேதுபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்.!

கடந்த 3ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் சென்ற விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து பின்னால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் மகா காந்தி என்பது தெரிய வந்துள்ளது. விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக மகாகாந்தி அவருக்கு வாழ்த்து சொன்ன பிறகு குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா என்று கேட்டதாகவும், அதற்கு விஜய் சேதுபதி யார் குரு என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றியதால் விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் தான் திருப்பி தாக்கியதாகவும் மகாகாந்தி கூறியுள்ளார். ஆனாலும் தம்மை தாக்கியவர் மீது விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இந்தநிலையில், முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கையை திரைப்படமாக தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஏ.எம்.செளத்ரி என்பவர் இன்னும் இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கல்லால் அடித்து கொலை செய்வதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதிக்கு அவர் சார்ந்த திரைத்துறையில் இருந்தே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   


Advertisement