வெந்து தணிந்தது காடு பட ப்ரமோஷனுக்கு பணியாற்றிய கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த அல்டிமேட் சர்ப்ரைஸ்..! குதூகலத்தில் கூல்..!Producer Isari Ganesh Gift to Cool Suresh

 

கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர்-நடிகைகள் சிம்பு, சித்தி இதனானி, ராதிகா உட்பட பலரும் நடித்து வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் சமீபத்தில் திரையில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. 

படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் இரண்டு பாகமாக வெளியிடப்படவுள்ளது.

Producer Isari Ganesh

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் பொருட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும், இயக்குனர் கெளதம் மேனனுக்கு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை வழங்கியிருந்தார். 

வெந்து தணிந்தது காடு பட தயாரிப்பு பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து, கூல் சுரேஷ் செல்லும் இடமெல்லாம் படத்தின் தலைப்பை உச்சரித்து சிம்புவின் வெறியராக தன்னை அடையாளப்படுத்திய நிலையில், அவருக்கு ஐசரி கணேஷ் ஐ போன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும், அவரது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.