பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெந்து தணிந்தது காடு.! இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு.! என்னனு பார்த்தீங்களா!!

பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெந்து தணிந்தது காடு.! இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு.! என்னனு பார்த்தீங்களா!!


producer-gifted-pullet-bike-to-direct-gautham-menon

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். 

வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது.

​​​​​​இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவருக்கு மிகவும் பிடித்தமான புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அந்த புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Pullet bike