நான் வாயை திறந்தா, சமந்தாவோட மானமே போய்டும்.! செம டென்ஷனாக கொந்தளித்த பிரபலம்.! என்ன நடந்தது??

நான் வாயை திறந்தா, சமந்தாவோட மானமே போய்டும்.! செம டென்ஷனாக கொந்தளித்த பிரபலம்.! என்ன நடந்தது??


producer-citybabu-talk-about-samantha

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராண கதையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் சாகுந்தலம். 60 கோடி பட்ஜெட்டில் உருவாகி 3டியில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. மேலும் சாகுந்தலம் திரைப்படம் தற்போதுவரை 10கோடியே வசூல் பெற்றுள்ளது. இதனால் சமந்தா ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு சமந்தாவை  விமர்சித்து, சாகுந்தலம் பட தோல்வியால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிவடைந்துவிட்டது. சமந்தா ஹீரோயின் தகுதியை இழந்துவிட்டார். சகுந்தலையாக நடிக்க அவர் சரியான தேர்வு கிடையாது. அவர் தனக்கு நோய் உள்ளதாகக் சொன்னதெல்லாம் நடிப்பு. அவர் அனுதாபமாக பேசி படங்களுக்கு மலிவான விளம்பரம் தேடிக் கொள்கிறார் என  பேசியுள்ளார்.

samantha

அதற்கு சமந்தா தனது இன்ஸ்டாவில், காது மடலில் அதிகமாக முடி எப்படி வளர்கிறது என கூகுளில் தேடி வந்த பதிலை ஷேர் செய்து, காது மடலில் அதிகமாக முடி வளர்ந்தால் அதிக ஹார்மோன் சுரப்பதாக அர்த்தம். இந்த பிரச்சனை யாருக்குள்ளது என உங்களுக்கு தெரியும் என சிட்டி பாபுவின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு வைரலான நிலையில் தயாரிப்பாளர் சிட்டிபாபு பேட்டி ஒன்றில், எனது காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், நான் சொன்ன வார்த்தைகளுக்கு பதில் அளித்து சமந்தா பேசியிருக்கலாம். நான் சமந்தா பற்றி வாய் திறந்தால் அவரது மானம் போய்விடும் என மிகவும் காட்டமாக விளாசியுள்ளார். இந்த மோதல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.