சினிமா

கையில் சிகரெட்டுடன் வசமாக சிக்கிய பிரியங்கா சோப்ரா! செமயா வெச்சு செய்த நெட்டிசன்கள்

Summary:

Priyanka chopra pic with cigarettes

தளபதி விஜய் நடித்து வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற இவர் அங்கேயும் சாதித்து காட்டினார். அதன்பின்னர் பிரபல ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வரும் இவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரியங்கா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மியாமி கடற்கரைக்கு சென்று கப்பலில் பயணித்துள்ளார். 

கையில் சிகரெட்டுடன் தனது கணவரின் அருகில் அமர்ந்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பகிரந்த பலர், திபாவளிக்கு வெடிக்கும் பட்டாசு இயற்கை சழலை பாதிக்கிறது என வாய் கிழிய பேசிய பிரியங்கா சோப்ரா இப்படி பொது இடத்தில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது மட்டும் நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர். Advertisement