அடுத்த சீன் இதுதானா? டாக்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிறக்கடிக்க ஆசை மீனா!
அந்த விஷயத்தை பற்றி யோசிக்காமல் பலரை காதலித்துவிட்டேன்.! மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா.?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. முதன் முதலில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். மாடலழகியான இவர் இதன்பின் தமிழில் எந்த படங்களிலும் நடிக்க முன்வரவில்லை.
இதன்பின் இந்தியில் திரைப்படங்கள் நடிக்க தொடங்கிய பிரியங்கா சோப்ரா, பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அமெரிக்கா பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டில் நடித்து வருகிறார்.
இதுபோன்ற நிலையில், பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி மிகவும் வைரலாகி வருகிறது. அதில் "நான் என்னுடன் நடிக்கும் நடிகர்கள் பலரை காதலித்தேன். உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் யோசிக்காமல் தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருந்தேன். அப்போது அது தவறென்று எனக்கு தெரியவில்லை என்று மனம் திறந்து பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.